பாரதிதாசனின் கவிதைகளில் காணப்படும் தனிச்சிறப்புகளில் எது முதன்மை நிலை வகிக்கின்றது?
ஜூன் 30க்குள் விடையளிக்கவும்.
நன்றி
உதய தாரகையின் விரத பாதுகை, கனவுத் தேடல்களின் அழகு தூரிகை, பதும பேரழகின் ததும்பும் சாரியை, நினைவு ஊர்வலத்தில் உருகும் சேரிசை, புதுமை பூப்பதிலே வளமை சீரசை, இளமைத் தூவிவரும் இதய பேரிகை, உணர்வு ஊக்குவிக்கும் உயிரின் ஓரிசை, உலகம் பூத்துவைக்கும் உறவுத் தாளிசை, மலர மனம்பரப்பும் மதுர வாழ்விசை, மகிழ அன்புதரும் முழுமை பாசமே...
வியாழன், 28 ஜூன், 2012
செவ்வாய், 26 ஜூன், 2012
புதன், 20 ஜூன், 2012
புதன், 13 ஜூன், 2012
அறிஞர்களின் பொன்மொழிகள்
விவேகானந்தர்
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிகாரிக்கப்பட்டவைதான்.
யார் ஒருவன் தனக்கு உள்ள கொளரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிகாரிக்கப்பட்டவைதான்.
யார் ஒருவன் தனக்கு உள்ள கொளரவமும் மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ, அத்தகையவன் அவமானத்தைத்தான் அடைகிறான்.
அறிஞர்களின் பொன்மொழிகள்
பெஞ்சமின்
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
பெர்னாட்ஷா
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு,
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
பெர்னாட்ஷா
- கடலில் முழ்கினால் முத்து எடுக்கலாம், கடனில் முழ்கினால் சொத்தை இழக்கலாம்.
- நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபாத்தானது.
செவ்வாய், 12 ஜூன், 2012
பொன் மொழிகள்
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை1
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை1
திங்கள், 4 ஜூன், 2012
ஷண்மதம்
ஷண்மதம்
ஷண்மதம்
ஆதி சங்கரர் இந்து
சமயத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் செய்த முக்கிய செயல் ‘சனாதன
தர்மம்’ என்று சொல்லப்பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப்படும் நம்
போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை “ஷண்மத வழிபாடு” எனச்
சொல்லுவது உண்டு. அவை பின்வருமாறு:
(1) பிள்ளையார் என்று நாம்
அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு = காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம்
அதிபதியான “கணபதி” வழிபாடு முதன்மையானது.
மற்றவை
(2) சிவனை வழிபடுபவர்கள் =
சைவர்கள்
(3) சக்தியை வழிபடுபவர்கள் = சாக்தர்கள்
(4) விஷ்ணுவை வழிபடுபவர்கள் = வைணவர்கள்
(5) முருகனை வழிபடுபவர்கள் = கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது.
(6) சூரியனை வழிபடுபவர்கள் =
செளரம் என்றும் பிரித்தார்.
இறைவன் ஒருவனே. ‘அத்வைதம்’
எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். இருந்தாலும் சாதாரண மக்களுக்காக
ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் “விஷ்வக்சேனர்” என்ற பெயரில்
வழிபடுகிறார்கள். அத்வைதிகளுக்குக் கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், ஹரனும்
ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது.
விநாயகர் சன்னதியை ஒரு முறை
வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல்
மஞ்சள் பொடியிலேயோ பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து,
அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான்
பூஜைக்கு ஏற்றவர். விநாயகர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு
அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும்
என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில்
வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை
அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச்
செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின்
உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின்
பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த
ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.
ஆக்கம் : இரா.
கோபாலகிருஷ்ணன்
IPG KSAH
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
