திங்கள், 16 ஜூலை, 2012

வணக்கம்.

ஒரு மரபுக்கவிதைக்கு ஏன் கற்பனை மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றது?

26 கருத்துகள்:

  1. ஒரு சிறந்த மரபுக்கவிதையை இயற்றுவதற்கு கற்பனை மிகவும் அவசியமான ஒன்றாகும். எந்த ஒரு கவிஞனும் தன்னுடைய கற்பனை வளத்தைக் கொண்டே சுவைமிக்கக் கவிதைகளை இயற்றுகிறான். மேலும், அந்த கற்பனையானது ஒருவரில் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. அதனால் தான், பெரும்பாலான கவிதைகள் ஒருவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் அமைகிறது. ஆகவே, கற்பனையின்றி கவிதை இல்லை என்லாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      உங்களின் விளக்கம் நன்று.
      பாராட்டுகள்.

      நீக்கு
  2. மனிதன் வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ அதுபோல கவிதைக்குக் கற்பனை மிக முக்கியம். கவிதைக்கு உயிர் நாடியாக இருப்பது கற்பனை. மேலும் கற்பனையை ஒரு கவிதையின் பொய்தோற்றம் எனவும் கூறலாம். கற்பனை இன்றி எந்த ஒரு கவிஞனாலும் சிறந்த ஒரு கவிதையை இயற்ற முடியாது. ஏனெனில், கற்பனையின் உதிரமே கவிதை. கற்பனையானது மனிதனின் வாழ்க்கையில் தொடர்புயது. கவிஞன் தான் பெறும் உணர்ச்சியைத் தூண்டிய காட்சியைக் கற்பனையாகப் படைக்கிறான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      விளக்கம் ஒரு வேறுபட்ட நிலையில் இருக்கிறது.
      நன்று.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. கற்பனை வளத்தினால் மட்டுமே ஒரு கவிஞனின் கவிதை மிளிர்கிறது. கற்பனை ஆற்றல் மிக்க ஒரு கவிஞனின் கவிதையின் கோணலும், தரமும் மற்ற கவிதைகளை விட சற்று மாறுப்பட்டே காணப்படும்.. ஒரு மரபுக்கவிதைக்கு அத்தியாவசியமானது சொல்லாட்சி.. கற்பனை வளம் கொண்டவரே சொல்லாசியை சரிவரக் கையாண்டு சிறந்த கவிதைகளை இயற்ற முடியும்....

    பதிலளிநீக்கு
  5. கவிதைக்கு அளவுக்கோலே கற்பனையாற்றல் ஆகும். கற்பனை உள்ளவனால் மட்டுமே சிறப்பான மரபுக்கவிதையினை வடிக்க இயலும். மனிதன் சில உணர்ச்சிகளை அல்லது செயல்களை நிஜமான வாழ்க்கையில் அமல்படுத்தமுடியாது. ஆனால் அவைகளை கற்பனையின் மூலமாக அவன் சாதிக்கலாம். அப்படிப்பட்ட கற்பனை ஊற்றின் மூலமாகவே கவிஞனின் கவித்திறமை வளர்கிறது என்பது என்னுடைய கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      சிறந்த கற்பனை ஆற்றல் மிளிர்கிறது.
      நன்று.

      நீக்கு
  6. பூட்டுக்குச் சாவி அத்தியாவசியப் பொருள் என்பதைப் போல் கவிதைக்குத் திரவுகோல் கற்பனையாகும். கற்பனையை சொற்களால் தொடுப்பதே கவிதையாக உருப்பெருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      மிகவும் சுருக்கமான விளக்கம்.
      இருப்பினும், கற்பனை வளம் நன்று.

      நீக்கு
  7. ஒரு கவிதை இரசிக்கத் தக்க வகையில் அமைய முக்கியக் காரணமாக அமைவது அக்கவிதையை இயற்றிய கவிஞனின் கற்பனை வளமே. கற்பனையாற்றல் அற்றவன் உயிரற்ற பொருளுக்குச் சமம். அதேவேளையில் கற்பனை வளம் பெற்றவன் கவிஞன். மரபுக் கவிதைக்கு மரபு அதாவது வடிவம் ஒரு கண் என்றால் கற்பனை மற்றொரு கண். இவ்விரு கண்கள் இருப்பின் கவிதை சிறப்பாக அமையும்.

    பதிலளிநீக்கு
  8. பொதுவாகவே மனிதன் கற்பனை குணம் படைத்தவன். எண்ணுவது எண்ணம், அந்த எண்ணத்தின் உருவே கற்பனை. கற்பனை செய்யக்கூடிய மனிதன் கவிப்பாடவும் முடியும்...வாழ்க்கையில் கூற இயலாத, அல்லது நடக்க இயலாதவற்றைக் கற்பனை செய்து பார்ப்பது மனிதனுக்குக் கிடைத்த ஒருவகை சுகம். கற்பனை மறு உருவம் பொய். கவிதையில் பொய் இருப்பின் அக்கவிதை அழகுரும்..அதுபோன்றே கற்பனையும், ..அக்கால கவிஞர்கள் தங்கள் பார்த்தவற்றை நுகர்ந்தவற்றை,அதனை முறைப்படுத்த எண்ணி கற்பனை கூறினியைத் தங்கள் கவிதையில் படைத்து மக்களுக்குச் சேர்க்க முற்பட்டனர். நிறைய காணும் போதுதான் கற்பனை வளர்கின்றது. தங்கள் கருத்துகளைக் கற்பனையாக உருவாக்கி அதனைப் படைக்கப்பெற்ற களமே மரபுக்கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  9. உடலுக்கும் மனதுக்கும், நமக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் இருக்கும் அற்புதமான தொடர்பை விளக்கும் அழகான கற்பனை ஒவ்வொரு கவிதையிலும் இருக்கும்.அழகான கொழுகொழு குழந்தைகளை எந்நேரமும் கற்பனை செய்யும் தாய்மார்களுக்கு அழகான குழந்தைகள் பிறக்கும் சாத்தியம் உள்ளது. அதனால்தான் கிரேக்கர்கள் உடலழகும் முக அழகும் கொண்ட ஆண் அல்லது பெண் கடவுளரின் சிலைகளை கர்ப்பிணிப் பெண்களின் அறைகளில் வைத்தனர். அதுவே ஒரு கற்பனையே..கற்பனையை சொற்களால் உருவாக்குவதே கவிதையாக உருப்பெருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      உங்களின் கற்பனை ஆற்றல் நன்று. இருப்பினும், அது கவிதையை ஒட்டி அமயுமானால் சிறப்பாக இருக்கும்.

      நீக்கு
  10. மரபுக்கவிதையின் கூறுகளில் கற்பனை என்ற கூறும் அடங்கும். அவ்வகையில், பொதுவாக கவிதையில் அதாவது மரபுக்கவிதையிலோ சரி புதுக்கவிதையிலோ சரி கற்பனையே அவசியமாகும். கற்பனை இல்லாதவன் கவிதை இயற்ற முடியாது.சுருங்கக் கூற வேண்டுமானால், கற்பனையின் உதிரமே கவிதை ஆகும். மேலும், பெரும்பாலும் கற்பனை என்ற கூறு வாழ்க்கையோடு தொடர்புடையதாக அமையும் என்பதையும் அறிக.

    பதிலளிநீக்கு
  11. (யாஷாலினி த/பெ ஸ்ரீ ராமன்) ஒரு சிறந்த மரபுக்கவிதையினை எழுதுவதற்குக் கற்பனை ஆற்றல் முக்கிய கூறாக அமைகின்றது. ஒரு மானிடன் தன்னுடைய கற்பனை ஆற்றலைக் கொண்டே ஒரு சிறந்த கவிதையை இயற்ற இயலும். மேலும், ஒருவரின் வாழ்க்கை அனுபங்களைக் கற்பனையோடு இணைத்து கவிஞர்கள் கவி எழுதுகின்றனர். கற்பனை ஆற்றல் இல்லையேல் எந்த கவிஞனாலும் கவி எழுத இயலாது.

    பதிலளிநீக்கு
  12. கவிதை என்பதே கற்பனைக்குரியதாகும். அப்படி இருக்க ஒரு கவிதையில் இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை மிகைப்படுத்திக் கூறவும் கற்பனை ஆற்றல் துணைப்புரிகிறது. எவன் ஒருவன் சிந்திக்கிறானோ, அவன்தான் மனிதன். அதுபோல, எவன் ஒருவன் கற்பனை வளம் கொண்டு திகழ்கின்றானோ, அவன் கவிஞன் ஆகிறான். கற்பனைத் திறத்தைக் கொண்டு மலையையும் பெயர்த்தெடுக்க முடியும் என்பது ஒரு கவிஞர் பாடியதாகும். அப்படி இருக்க, ஒரு கவிஞனின் உயர்ந்த கற்பனை ஆற்றல் அவன் இவ்வுலகைப் புதியக் கோணங்களில் கண்டு கவிதை எழுத உந்து சக்தியாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. சுருங்கக் கூறின், கற்பனை இல்லையேல், கவிதை இல்லை. நன்றி...

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. ஒரு கவிதையை வாசித்ததும் அக்கவிஞன் உணர்த்தவரும் கரு, சூழ்நிலை, காலம், போன்றவற்றை உணர கற்பனை அவசியம். இதனால்தான், அக்காலம் முதல் இக்காலம் வரை; கவிஞனின் எண்ணங்களை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு களம் மரபுக்கவிதை. அஃது அவனது சுய கற்பனையாகவும் சில சமயங்களில் மானிடனை சிந்திக்க வைக்கும் வகையில் அமைகிறது.

    பதிலளிநீக்கு
  15. கற்பனை எனப்படுவது ஒரு சிறந்த கவிதையின் உயிர்நாடியாகக் கருதப்படுகின்றது. கவிஞன் தான் பெற்ற உணர்ச்சியையே மற்றவரும் அடையச் செய்வதற்கு அவன் தன் உணர்ச்சியைத் தூண்டிய காட்சியைக் கற்பனையாகப் படைக்கின்றான்.தான் பெற்ற அனுபவத்தைப் பிறரும் உணருவதற்குக் கவிஞனின் கற்பனை ஆற்றல் வழிவகுப்பதால் மரபுக்கவிதைக்குக் கற்பனை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது.மேலும் நடைமுறை வாழ்க்கைக்கு மாறுபட்ட கருத்துகளையும் புதிய சிந்தனைகளையும் வெளிப்படுத்த கற்பனை ஆற்றல் துணைப்புரிகின்றது.

    பதிலளிநீக்கு
  16. கற்பனை இருந்தால் மட்டுமே கவிதை எழுத முடியும். கவிஞனின் கற்பனை கவிதையாக இப்புவியில் உலா வருகிறது...

    பதிலளிநீக்கு
  17. (அர்வின்சுந்தரம் த/பெ சிதம்பரநாதன்) பொதுவாகவே கவிதை எழுதுவதற்கு கற்பனை ஆற்றல் அவசியமாக அமைகின்றது. கற்பனை ஆற்றல் இருந்தால் மட்டுமே மிகச் சிறந்த கவிதைகளை எழுத இயலும்.

    பதிலளிநீக்கு