வியாழன், 19 ஜூலை, 2012

கவிதை

வணக்கம்.
கவிதை எழுத விருப்பம் கொண்டோருக்கு உந்துதல் சக்திகளாக விளங்கும் கூறுகள் யாவை?

28 கருத்துகள்:

  1. கவிதை எழுதுதல் என்பது ஒரு தனிக்கலை. அக்கலையைப் படைக்க விரும்புவர்களுக்கு உந்துதலாக அமைவது அவர்களின் கற்பனையும் உணர்ச்சியும் தான். எப்படி ஒரு கவிதை கற்பனை அவசியமோ அதே போல உணர்ச்சியும் அவசியமாகும்.. இதன்வழியே கவிஞன் கவிதையில் எதைக் கூற வருகிறன் என்பதையும் வாசகர்களால் அறிய இயலும். மேலும், காட்சியும் கவி பாட ஒரு உந்துதல் சக்தியாக இருக்கிறது. ஏனெனில் தன் கண்ட காட்சியையே கவிஞன் கற்பனை கொண்டு கவி எழுதுகிறான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      உங்களின் கருத்து மிகவும் ஏற்புடையது.
      நன்றி.

      விரிவுரைஞர்.

      நீக்கு
  2. நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு உணர்ச்சி மேலோங்கி இருக்கும். அதனை சிறந்த சொல்லாட்சியைக் கொண்டு கவிதை இயற்றினால் கவர்ச்சிகரமிக்கதாக அமையும்.. ஆக, உணர்ச்சியின் வெளிபாடுடே கவிதை இயற்றுவதற்கு முக்கிய கூறாகவும் உந்துதலாகவும் அமைகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      பதில் நன்று. ஏற்புடையது.
      விரிவுரைஞர்.

      நீக்கு
  3. கவிப் படைப்பது அனைவருக்கும் கை வந்த கலை இல்லை. ஏனென்னில் கவிதையை அனைவராலும் விமர்சிக்க முடியும், ஆனால் அதையே அவைகளால் சிறந்த படைப்பாக வெளிக்கோணர முடியாது.கவி பாட ஒரு உந்துதல் சக்தியாக அமைவது கவிஞரின் கற்பனையும் உணர்ச்சியும் தான்.உணர்ச்சி இல்லாத மக்கள் மாக்களாகவே கருதப்படுவர்.. ஆகவே, இறைவனால் வழங்கப்பட்ட கற்பனை வளத்தையும் உணர்ச்சியையும் கொண்டு நம் சிறந்த படைப்புகளை இயற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      மிகவும் சிறப்பான கருத்து.பாராட்டுகள்.
      நன்று.

      நீக்கு
  4. எல்லோராலும் கவிப்படைக்க இயலாது....தமிழில் ஆளுமையும், கவிதைப் படைக்கும் எண்ணம் கொண்டவரால் மட்டுமே கவிப்படைக்க இயலும். அதுமட்டுமல்லாமல், கவிப் படைப்பவனுக்கு கற்பணை ஆற்றலானது மிக அவசியம்.. உணர்ச்சி கொண்ட ஒருவனால் மட்டுமே கவியை உணர்வுப்பூர்வமாக வெளிக் கொணர முடியும்.

    பதிலளிநீக்கு
  5. இயல்பாகவே சிந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் கவிதை புனைவதில்லை. ஏனெனில், கவிதை எழுதுவோரிடத்தில் இருக்கும், ஏதோ ஓர் உந்து சக்தி அவர்களிடத்தில் இருப்பதில்லை. இன்று, உலகில் கவிஞர்கள் அனைவரும் பல்லாயிரக்கோடி கவிதைகளை எழுத அஸ்திவாரமாக இருப்பது அவர்களின் வரையறையற்ற கற்பனை ஆற்றலும் உணர்ச்சியுமே ஆகும். தன் வாழ்நாளில் அனுபவிக்கும் விஷயங்களைச் சிந்தித்து, கற்பனை செய்து, அதனை உணர்ந்து எழுதும் போது வரிகள் கவிதையாகின்றன. அதே வேளை, ஒருவன் மகிழ்ச்சியாக இருக்கும் போது மட்டும்தான் கவிதை இயற்றுவான் என்று விதிகள் ஏதும் இல்லை. கோபம், வெறுப்பு, காதல், நாட்டுப்பற்று ஆகிய உணர்ச்சிகள் மேலிட்டாலும் கவிதை இயல்பாக வரும் என்பதை நாம் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      உங்களின் கருத்து முழுமைப்பெற்றுள்ளது.
      நன்று.
      விரிவுரைஞர்.

      நீக்கு
  6. மாதவி த/பெ முனியாண்டி ஆம், தோழியே...அவைவராலும் கவிப்படைத்திட இயலாது. என்னுடையப் பார்வையில், கவிதையைப் படைக்க விருப்பும் ஒருவன், கற்பனை சக்தியையும் கவிதையைப் படைக்க விரும்பும் ஆர்வத்ததோடு அக்கவிதையில் உட்புகுத்த வேண்டிய உணர்ச்சியின் வெளிப்பாடுமே அவன் கவிதை எழுத உந்துதல் சக்திகளாக விளங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  7. கவிதை படைப்பதற்கு உந்துதலாக அமைவது சிந்தனையும் கற்பனை ஆற்றலுமாகும். இவை இரண்டும் இருந்தால் மட்டும் போதாது சொல்லாட்சியையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். சிந்தனை, கற்பனை ஆற்றல் மற்றும் சொல்லாட்சியைக் சரிவர கையாளக் கூடிய ஒருவரால் சிறந்த கவிதைகளை இயற்ற முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      ஏற்புடைய கருத்து.
      நன்று.
      விரிவுரைஞர்.

      நீக்கு
  8. பொதுவாகவே கவிதை எழுதுவதற்கு கல்வி அறிவு பெற்ற அனைவருமே முன்வருவதில்லை.கல்வி அறிவோடு கற்பனை ஆற்றலையும் உணர்ச்சியையும் பெற்றவர்களே அதிகளவில் கவிதைகளைப் படைக்கின்றனர்.சிறந்த கற்பனை ஆற்றலை கொண்ட ஒருவரே தன் வாழ்க்கையில் நடந்தவற்றையும் நடக்காதவற்றையும் நல்ல சொல்லாட்சியின் மூலம் கவிதை வடிவில் படைக்கின்றார்.அம்மாதிரியான கவிதைகளில் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை நாம் கண்கூடாகக் காணலாம்.ஆக,சிறந்த கற்பனை ஆற்றலும்,உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளும்,நல்ல சொல்லாட்சியும் கவிதை எழுத விருப்பம் கொண்டோருக்கு உந்துதல் சக்தியாக விளங்கும் கூறுகள் என்று நான் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விமலா,
      உங்களின் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளது.

      நீக்கு
  9. கவிப் படைப்பவனுக்கு கற்பணை ஆற்றலானது மிக அவசியம். உணர்ச்சி கொண்ட ஒருவனால் மட்டுமே கவியை உணர்வுப்பூர்வமாக வெளிக் கொணர முடியும்.

    பதிலளிநீக்கு
  10. காதலில் விழுந்தவன் எழுதுவது இன்பக் கவிதை ; காதலில் தோற்றவன் எழுதுவது சோகக் கவிதை...கவிதை எழுத காதல் காற்றடித்தாலே போதும்...காதலைத் தவிர வேற்றுப் பல உந்துதல் இயற்கை, சமுதாயச்சிந்தனை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
  11. கவிதை எழுதுவது என்பது ஒரு கலை ஆகும். கவிதை எழுதுவதற்கு கற்பணை ஆற்றலும் உணர்ச்சியும் உந்துதலாக அமைகின்றது. இவை இரண்டும் இருந்தால் மட்டுமே ஒரு சிறந்த கவிதையினை படைக்க இயலும்.

    பதிலளிநீக்கு
  12. கற்பனையும் உணர்ச்சியும் கவிதை எழுதுவதற்கு உந்துதலாக இருக்கிறது. இவ்விருக் கூறுகளே ஒரு சிறந்த கவிதையை உருவாக்க அடித்தளமாக திகழ்கிறது. தனிமனிதனைப் பேனாவாகவும் கற்பனை மற்றும் உணர்ச்சி ஆகிய இருக் கூறுகளையும் பேனாவின் மையாகவும் உவமைப்படுத்தலாம். ஒருவன் ஒரு சிறந்த எழுத்துப்படிவத்தை அல்லது கவிதையை உருவாக்குவதற்கு பேனாவின் மை அதாவது கற்பனை, உணர்ச்சி ஆகிய கூறுகளே இன்றியமையாமல் திகழ்கிறது.

    பதிலளிநீக்கு
  13. ( அர்வின்சுந்தரம் த/பெ சிதம்பரநாதன் ) ஒரு கவிதை எழுதுவதற்கு உந்துதலாக அமைவது கற்பனையும் உணர்ச்சியும் ஆகும். இந்த இரு கூறுகளே ஒரு சிறந்த கவிதை உருவாக்குவதற்கு காரணமாக அமைகின்றது. அதிகமாக கற்பனை செய்பவனே சிறந்த கவிஞனாக திகழ்வான்.

    பதிலளிநீக்கு
  14. உங்களின் அனைவரின் பங்கேற்பு பாராட்டும் வகையில் உள்ளது.

    நன்று.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. கற்பனை ஆற்றல் இல்லாதவன் கவிதை இயற்ற இயலாது. அவ்வகையில், கவிதை இயற்ற விருப்பம் கொண்டோருக்கு உந்துதல் சக்தியாக விளங்கும் முதன்மையான கூறு கற்பனை எனலாம். மேலும், நல்ல மொழிநடை, உணர்ச்சிகளின் வெளிப்பாடு போன்றவையும் கவிதை எழுத விருப்பம் கொண்டோருக்கு உந்துதல் சக்தியாக விளங்கும் கூறுகள் ஆகும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு